வீடியொக்கள் காட்டவும் ( 101 - 125 இன்: 222 )
வாழ்க்கையே வணக்கமாகும்
2015-12-15
வர்த்தகம், விளையாட்டு, விவசாயம், களியாட்டம் தா தமது வாழ்கையாக இன்று மக்கள் கொண்டுள்ளார்கள். ஆனால் தவ்ஹீத், தக்வா, நல்லமல்கள் என்பன குர்ஆன் சுன்னத்திற்கு ஏற்ற முறையில் இருக்கும்போது அந்த வாழ்க்கை வணக்கமாக மாறும். தொழுகை, சகாத், நோன்பு, ஹஜ் என்பன நிறைவேற்றப்படவேண்டும் பெரும் பாவங்களிலிருந்து நீங்க வேண்டும்.
பித்அத்தை புறக்கணிப்போம்
2015-12-15
அல்லாஹ்வுடைய திருப்திதான் எமது வாழ்வின் நோக்கம். மறுமையே எமது இலக்கு. அதற்காக எந்த துன்பத்தையும் தாங்குவோம். இஸ்லாத்தை அழிக்க முயன்ற பலர் தோல்வி கண்டனர. அதனால் உஸமான் (ரழி)காலத்தில் இஸ்லாத்தில் ரகசியமா புகுந்த ஒரு யூதன் இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தினான். அந்த யூதனின் வலையில் சிக்கியவர்கள் ஷீஆக்களாக மாறினார்கள்.
ஸுபஹ் தொழுகை - சிறப்புக்களும், எச்சரிக்கைகளும்
2015-12-12
ஸுபஹ் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு பற்றி வந்துள்ள நபிமொழிகளும், அதனை விடுவது பற்றி வந்துள்ள எச்சரிக்கைகளும், ஜமாஅத்தாக அதனை நிறைவேற்றலும்
இஸ்லாத்தின் பார்வையில் முஃஜிஸத்துக்களும் கராமத்துக்களும்
2015-12-12
முஃஜிஸத்துக்களும் கராமத்துக்களும் என்பதன் விளக்கம், அது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு, அதில் மக்களின் நம்பிக்கைகள்
ஒரு கடவுள் வழிபாடு ஏன்
2015-12-12
ஒரு கடவுளை மாத்திரம் ஏன் வணங்க வேண்டும்? அந்த ஓர் இறைவன் அல்லாஹ்தான் என்று ஏன் கூறுகின்றோம்? போன்ற கேள்விகளுக்கான தெளிவு
அகீதாவை பற்றிய விளக்கம்
2015-11-28
அகீதாவின் கொள்கை விளக்கம். முதலாவது தவ்ஹீத் பற்றிய பாடம். 1.இகீதாவை பற்றிய அறிவைபெற தகுதி உடையவராக இருக்க வேண்டும்.2. அறிவை செயல் படுத்தக் கூடியவராக இருக்கவேண்டும். 3.இதனை பற்றி தஅவா செய்யக் கூடியதவராக இருக்கவேண்டும். 4. இவற்றில் ஈடுபடும் போது தேலையான சப்ர் எனும் பொறுமை எம்மிடம் இருக்க வேண்டும்.
ஷியாக்களின் பார்வையில் சஹாபாக்கள்
2015-11-28
குர்ஆனுக்கும், சுன்னத்துக்கும் மாற்றமாக செயல் புரிந்த அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதனின் தலைமையில் உதுமான் (ரழி) எதிராக உருவாகிய அரசியல் கூட்டம் தான் ஷீஆக்கள். சில வருடங்கள் கழிந்த பின் இதுவே இன்னுமொரு மதமாக மாறியது. இன்று குர்ஆனையே குற்றம் கூறி, அலி (ரழி) முன்வைத்து சரித்திரத்தையே மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வழிமுறை
2015-11-17
அனைத்து வணக்கங்களிலும் நபியவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம்
இஃலாஸ்
2015-11-17
வணக்கங்கள் உட்பட மனித வாழ்கையின் அனைத்து காரியங்களலும் இஃலாஸின் முக்கியத்துவம்.
ரஜப் மாதத்தில் இடம்பெறும் சில நூதனங்கள்
2015-10-31
ரஜப் மாதத்தில் மக்கள் மத்தியில் இடம்பெறும் சில நூதனங்கள்
நபியவர்களை விசுவாசிப்பதன் விளக்கம்
2015-10-31
நபியவர்களை விசுவாசிப்பதன் அர்த்தம், அவர்களை உண்மைப்படுத்தல், ஏவலுக்குக் கட்டுப்படல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல், அவர் காட்டிய பிரகாரமே அல்லாஹ்வை வணங்குதல்.
கடவுள் ஏன் மனிதனாக இருக்க முடியாது
2015-10-31
மனிதன் கடவுளாக வர முடியாத, கடவுளின் சில முக்கிய பண்புகள்
முஹர்ரம் தரும் படிப்பினைகள்
2015-10-23
அல்லாஹ் அல்-குர்ஆனில் சத்தியம் செய்யும் பொருற்கள் மனித வாழ்வுக்கு மிகமுக்கியமானவை. அதிலொன்று தான் காலமாகும்.காலம் ஓர் அருள், அதனை இபாதத்தில் கழிக்காவிடில் மருளாகிவிடும். நாட்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தரக்கூடியதாய் அமைக்க வோண்டுமெனக் கூறி இஸ்லாமியப் புதுவருடத்தை அமல்களில் செலவளிக்க உரை விளக்குகின்றது.
முஹர்ரமும் முஸ்லீம்களும்
2015-10-21
மாதங்கள் பனிரெண்டுல் நான்கு மாதங்கள் சிறப்புக்குரியவை அவற்றில் முஹர்ரமும் ஒன்றாகும். அதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமுமாகும். இது கணிப்பீட்டின் அடையாளமே தவிர கொண்டாட்டத்துக் குரிய நாளல்ல.ஆஷுராவுடன் தாஸுஆ சேர்த்துக் கொண்டதே யூதர்களுக்கு மாற்றமாக நடக்க வேண்டும் என்பதற்காவே. மாற்றமாக அவர்களைப் போல் நினைத்தபடி கொண்டாட்டங்களை உருவாக்குவதற்கல்ல என இவ்உரையில் எச்சரிக்கப்படுகின்றது.
முஹர்ரம் மாதத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள்
2015-10-19
படைக்கப்பட்ட மாதங்களில் சிலதை அல்லாஹ் சிறப்புக் குறிய மாதங்களாக ஆக்கி இருக்கின்றான். அவ்வாறு மாதங்களாக இருப்பினும் சரி, இடங்களாக இருப்பினும் சரி அவற்றை மனிதன் தானாக தீர்மானித்து விட முடியாது. அதனடியே இஸ்லாம் மாதங்களில் முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்தப்பட்ட மாதமாக மாற்றி இருக்கின்றது. இது இஸ்லாமிய மாதத்தில் முதல் மாதமாகும், ஹிஜ்ரத், கர்பலா போன்ற நிகழ்வு நடைபெற்ற மாதமாகும், ஆஷுரா,தாஸுஆ எனும் ரமழானுக்குப் பிந்திய சிறப்பு மிகு நோன்பைக் கொண்ட மாதம் என சிறப்புகள் இங்கு விளங்கப்படுத்தப்படுகின்றன.
பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம் தான்
2015-10-19
பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும். பிரார்த்தனை விடயத்தில் மக்களின் வகை
அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு
2015-10-19
அல்குர்ஆனின் வரைவிலக்கணம், அதனை ஓதுவதன் சிறப்பு, விளங்குவது, அதனை வெறுப்பதன் அர்த்தம்
ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம்
2015-10-19
ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம், மக்கள் விளங்கி வைத்துள்ள மாற்று விளக்கங்கள்
ஹராத்தைப் புசித்தல் எச்சரிக்கைகளும் விபரீதங்களும்
2015-10-19
விலக்கப்பட்ட உணவுகள், வியாபார முறைகள், அவை பற்றிய அல்குர்ஆன், ஹதீஸின் எச்சரிக்கைகள், அவற்றைப் புசிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்
வஹியின் மகாகத்துவம்
2015-10-12
அல்குர்ஆன் , ஸுன்னாவை கண்ணியப்படுத்துவதன் முக்கியத்துவம், அதன் அடயாளங்கள், பின்பற்றாமலிருப்பதன் விபரீதங்கள்
ஹஜ்ஜதுல் விதாவும் ஓரிறைக் கொள்கையும்
2015-10-12
ஹஜ்ஜதுல் விதாஃ போதிக்கும் ஈமானிய அம்சங்களும் அதனுடன் தொடர்பான சில சம்பவங்களும்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி
2015-10-12
ஆணோ, பெண்ணோ ஈமான் கொண்ட நிலையில் நல்லமல்கள் புரிகின்றார்களோ அவர்களை மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ வைப்போம் என அல்லாஹ் சூறதுந் நஹ்லில் கூறுகின்றான். மனிதன் மகிழ்ச்சி தேடி அனுமதித்த, தடுத்த வழிகளில் பயணிக்கின்றான். எதுவாயினும் வழி இறைநாட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொள்வதே. அல்லாஹ்விடமே எமது நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. ஆக அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதன் மூலம் அவனது அன்பைப் பெறுவோம், மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு அடித்தளமிடுவோம் என இவ்உரை வழிகாட்டுகின்றது.
ஹிஜ்ரத் ஓர் இறைதிருப்தியாகக் கொண்ட பயணம்
2015-10-12
தொழுகை,நோன்பை இபாதத்தாக பார்ப்பதைப் போன்று ஹிஜ்ரத்தை யாரும் ஓர் இபாதத்தாக பார்ப்பது கிடையாது. உள்ளத்தால் நிறை வேற்றப்பட வேண்டிய சோதனையே ஹிஜ்ரதாகும். தான் விரும்பிய அத்தனையும் அல்லாஹ்வின் விருப்பத்திற்காக விட்டுக்கொடுப்பதைக் குறிக்கும். அப்படியான ஒன்றுதான் நபிகளாரின் ஹிஜ்ரத். எப்போதும் ஒரு முஸ்லிம் போக விரும்பும் பூமியை விட்டும், அப் போதிருந்த வியாபார பூமி, வாழ் நாளுக்காய் சோர்த்த அத்தனையும் விட்டுச் சென்றார்கள்.அத்துடன் ஹிஜ்ரத்தின் இன்னும் சில வடிவங்களை இவ்உரை பேசுகின்றது.
ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்
2015-10-06
நபி(ஸல்) க்கு எதிராகவும், அவர்களது தஃவாக் கெதிரான நெருக்குவாரங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. ஒரு முறை ஸைத் ப்னு ஹாரிஸா(ரழி) பார்க்கின்ற போது செருப்புகள் இரத்தத்தால் நனைகின்ற அளவு வருத்தம் கொடுக்கின்றனர்.அத்தோடு தஃவாப் பணியை தடுக்க முழு அளவிலான செயற்பாடுகள் ஆரம்பித்த போது ஹிஜ்ரத் தயாரானது. ஹிஜ்ரத் அழைப்புப் பணி எப்பொழுதும் எதிர்க்கப்படும் என்ற செய்தியினையும், மார்க்கத்தில் உறுதி, அல்லாஹ்வின் மீது பரம்சாட்டுதல்,திட்டமிடலின் அவசியம்,ஸஹாபாக்களின் நேசம் போன்ற படிப்பினைகள் இங்கு பேசப்படுகின்றது
ஹஜ் போதிக்கும் சமத்துவம்
2015-09-23
சமத்துவத்தை அடிப்டையாகக் கொண்டு உலக சமாதானத்தை பறை சாற்றும் வணக்கமே ஹஜ்ஜாகும். நிற, மத,மொழி வேறு பாடற்று ஒரே ஆடையில், ஒரே வசனத்தை மொழிந்தவர்களாக உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இந்த சமத்துவம் அல்லாஹ்வை ரப்பாகக் கொண்டவர்களுக்கு மாத்திரம் உரித்துடையதே தவிர இதனை இதர கொள்கைகளாளோ, சித்தாந்தங்களாளோ உருவாக்கி விட முடியாது. இஸ்லாம் தக்வாவை மாத்திரம் வைத்தே எடை போடும் என உரை விபரிக்கின்றது.
Go to the Top