வீடியொக்கள் காட்டவும் ( 101 - 125 இன்: 322 )
2015-12-30
பெண்கள் விஷயத்தில் குர்ஆன் காட்டிய அக்கறை பற்றி பெண்கள் அறியமாட்டார்கள். லிஹார் எனும் விவாகரத்து, விவாக ரத்து பெற்ற பெண் மீண்டும் தன் கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதி, இரு முறை மாத்திரம் தலாக் கூற அனுமதி அளிப்பதன் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு, பெண்களின் சுய விருப்பமின்றி நிர்ப்பந்தமாக மணமுடிக்கத் தடை, தந்தை இறந்த பின் அவரது மனைவிகளை மணமுடிக்க மகனுக்கு தடை, ஈமானுள்ள அடிமை பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த தடை, அப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மன்னிப்பு, ஹிஜ்ரத் செய்த பெண்களை சோதித்து பார்த்து அவர்களுக்கு இஸ்லாத்தில் தஞ்சம் அளிப்பது, பெண்கள் மீது கூறும் அவதூருக்கு உரிய தண்டனை போன்ற விஷயங்களில் குர்ஆன் விஷேச கவனம் செலுத்திய விபரங்கள் இதில் விளக்கம் உண்டு.
2015-12-30
உள்ளம் தூய்மை அடைய, பாவங்களில் இருந்து நீங்க தஅவா என்றென்றும் தொடர்ந்து நடைபெற வேண்டும். பயான் செய்வது மாத்திரம் தஅவா ஆகி விடாது. பல் வேறு வழிகள் மூலம தஅவா செய்வதற்கு அல்லாஹ் எமக்கு வழி வைத்திருக்கிறான். ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற முறையில் சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக தஅவா செய்ய வேண்டும். தஅவா செய்பவர் தற்பெருமை பேசக் கூடாது என்பதும் முக்கியம்.
2015-12-24
ஈமான் கூடலாம், குறையலாம் ஆனால் ஈமானில் உறுதி இருக்க வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. உறுதியான ஈமான் கொண்ட வாழ்வில் அச்சமோ, துன்பமோ இல்லை. ஈமானுக்கு மாற்றமான நடைமுறை எமது வாழ்வில் இருக்கக் கூடாது. மறுமையின் வெற்றி இதில் தான் தங்கியுள்ளது.
2015-12-23
எம்முடன் மற்றவர்கள் எவ்வாறு நடக்க வேண்டுமென்று நாம் விரும்புவோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களுடன் நடக்க வேண்டும் என்ற பொதுவிதியை தெளிவுபடுத்தல்
2015-12-23
முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் வரலாறு, செய்த சேவைகள், அவர்கள் விடயத்தில் மக்கள் அளவு கடந்து செல்லல்
2015-12-23
அல்லாஹ்வின் ஆலயமாகி கஅபவின் சிறப்பும். அதனை பாதுகாக்கும் பொறுப்பு அல்லாஹ்வுக்கு சொந்தம் என அல்லாஹ் கூறுகிறான்
2015-12-18
நபி (ஸல்) காட்டித்தராத நூதனங்கள் இந்த மாதம் இஸ்லாத்தின்பெயரில் நடைபெறுகின்றன. நபி அவர்கள் மனித சுபாவம் உள்ளவர்.தெய்வ சுபாவம் கொடுக்கப் பட வில்லை. அவருக்கு செய்யக்கூடிய கண்ணியம், அவரது முன்மாதிரியை பின்பற்றுவதே. மீலாத் உற்சவம் இப்படிப் பட்ட பித்ஆவாகும். ஹிஜ்ரி 322 வருடம் பாத்திமித் பரம்பரையில் ராபிதி சிந்தனையினல் வந்த அரசனால் மிலாத் ஆரம்பக்கப்பட்டது.
2015-12-15
வர்த்தகம், விளையாட்டு, விவசாயம், களியாட்டம் தா தமது வாழ்கையாக இன்று மக்கள் கொண்டுள்ளார்கள். ஆனால் தவ்ஹீத், தக்வா, நல்லமல்கள் என்பன குர்ஆன் சுன்னத்திற்கு ஏற்ற முறையில் இருக்கும்போது அந்த வாழ்க்கை வணக்கமாக மாறும். தொழுகை, சகாத், நோன்பு, ஹஜ் என்பன நிறைவேற்றப்படவேண்டும் பெரும் பாவங்களிலிருந்து நீங்க வேண்டும்.
2015-12-15
அல்லாஹ்வுடைய திருப்திதான் எமது வாழ்வின் நோக்கம். மறுமையே எமது இலக்கு. அதற்காக எந்த துன்பத்தையும் தாங்குவோம். இஸ்லாத்தை அழிக்க முயன்ற பலர் தோல்வி கண்டனர. அதனால் உஸமான் (ரழி)காலத்தில் இஸ்லாத்தில் ரகசியமா புகுந்த ஒரு யூதன் இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தினான். அந்த யூதனின் வலையில் சிக்கியவர்கள் ஷீஆக்களாக மாறினார்கள்.
Go to the Top