வீடியொக்கள் காட்டவும் ( 176 - 200 இன்: 322 )
2015-10-19
அல்குர்ஆனின் வரைவிலக்கணம், அதனை ஓதுவதன் சிறப்பு, விளங்குவது, அதனை வெறுப்பதன் அர்த்தம்
2015-10-19
ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம், மக்கள் விளங்கி வைத்துள்ள மாற்று விளக்கங்கள்
2015-10-19
விலக்கப்பட்ட உணவுகள், வியாபார முறைகள், அவை பற்றிய அல்குர்ஆன், ஹதீஸின் எச்சரிக்கைகள், அவற்றைப் புசிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்
2015-10-12
அல்குர்ஆன் , ஸுன்னாவை கண்ணியப்படுத்துவதன் முக்கியத்துவம், அதன் அடயாளங்கள், பின்பற்றாமலிருப்பதன் விபரீதங்கள்
2015-10-12
ஹஜ்ஜதுல் விதாஃ போதிக்கும் ஈமானிய அம்சங்களும் அதனுடன் தொடர்பான சில சம்பவங்களும்
2015-10-12
ஆணோ, பெண்ணோ ஈமான் கொண்ட நிலையில் நல்லமல்கள் புரிகின்றார்களோ அவர்களை மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ வைப்போம் என அல்லாஹ் சூறதுந் நஹ்லில் கூறுகின்றான். மனிதன் மகிழ்ச்சி தேடி அனுமதித்த, தடுத்த வழிகளில் பயணிக்கின்றான். எதுவாயினும் வழி இறைநாட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொள்வதே. அல்லாஹ்விடமே எமது நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. ஆக அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதன் மூலம் அவனது அன்பைப் பெறுவோம், மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு அடித்தளமிடுவோம் என இவ்உரை வழிகாட்டுகின்றது.
2015-10-12
தொழுகை,நோன்பை இபாதத்தாக பார்ப்பதைப் போன்று ஹிஜ்ரத்தை யாரும் ஓர் இபாதத்தாக பார்ப்பது கிடையாது. உள்ளத்தால் நிறை வேற்றப்பட வேண்டிய சோதனையே ஹிஜ்ரதாகும். தான் விரும்பிய அத்தனையும் அல்லாஹ்வின் விருப்பத்திற்காக விட்டுக்கொடுப்பதைக் குறிக்கும். அப்படியான ஒன்றுதான் நபிகளாரின் ஹிஜ்ரத். எப்போதும் ஒரு முஸ்லிம் போக விரும்பும் பூமியை விட்டும், அப் போதிருந்த வியாபார பூமி, வாழ் நாளுக்காய் சோர்த்த அத்தனையும் விட்டுச் சென்றார்கள்.அத்துடன் ஹிஜ்ரத்தின் இன்னும் சில வடிவங்களை இவ்உரை பேசுகின்றது.
2015-10-06
நபி(ஸல்) க்கு எதிராகவும், அவர்களது தஃவாக் கெதிரான நெருக்குவாரங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. ஒரு முறை ஸைத் ப்னு ஹாரிஸா(ரழி) பார்க்கின்ற போது செருப்புகள் இரத்தத்தால் நனைகின்ற அளவு வருத்தம் கொடுக்கின்றனர்.அத்தோடு தஃவாப் பணியை தடுக்க முழு அளவிலான செயற்பாடுகள் ஆரம்பித்த போது ஹிஜ்ரத் தயாரானது. ஹிஜ்ரத் அழைப்புப் பணி எப்பொழுதும் எதிர்க்கப்படும் என்ற செய்தியினையும், மார்க்கத்தில் உறுதி, அல்லாஹ்வின் மீது பரம்சாட்டுதல்,திட்டமிடலின் அவசியம்,ஸஹாபாக்களின் நேசம் போன்ற படிப்பினைகள் இங்கு பேசப்படுகின்றது
2015-09-23
சமத்துவத்தை அடிப்டையாகக் கொண்டு உலக சமாதானத்தை பறை சாற்றும் வணக்கமே ஹஜ்ஜாகும். நிற, மத,மொழி வேறு பாடற்று ஒரே ஆடையில், ஒரே வசனத்தை மொழிந்தவர்களாக உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இந்த சமத்துவம் அல்லாஹ்வை ரப்பாகக் கொண்டவர்களுக்கு மாத்திரம் உரித்துடையதே தவிர இதனை இதர கொள்கைகளாளோ, சித்தாந்தங்களாளோ உருவாக்கி விட முடியாது. இஸ்லாம் தக்வாவை மாத்திரம் வைத்தே எடை போடும் என உரை விபரிக்கின்றது.
2015-09-20
அனைத்து இபாதத்துக்களும் சமூகம் வோண்டி நிற்கின்ற மாற்றங்களை தாங்கி நிற்பவை.ஐக்கியம்,சகோதரத்துவம்,ஒருமைப்பாடு,நோர முகாமைத்துவம் அவற்றில் சிலவாகும். அது தொழுகை தொடக்கம் ஹஜ் வரையிலான அனைத்து இபாதத்துகளிளும் பொதிந்து காணப்படுகிறது. இந்த மார்க்கம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ள ஐந்து தூண்களில் ஹஜ்ஜும் ஒன்று. ஹஜ் உடலியல்,உளவியல்,நடத்தை ரீதியான மாற்றங்ளை தரும். அவ்வாறான மாற்றங்ளை இவ்உரை தொட்டுப் போசுவதாக அமைந்திருக்கின்றது.
2015-09-20
வணக்கங்களில் மிக இலகுவான வணக்கம் ஹஜ்ஜாகும். ஆனால் இன்று கஷ்டமாக நினைத்துக் கொண்டிருக்கும் வணக்கமும் அதுவே.நபிகளார் அன்றிருந்த மக்களுக்கு அடி முதல் நுனி வரை ஹஜ்ஜை கற்றுக்கொடுக்க வில்லை, ஏனெனில் ஹஜ் நபி (ஸல்) வருகைக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.எனவே ஏலவே இருந்த ஹஜ்ஜை நெறிப்படுத்தினார்கள். அந்த வகையில் ஹஜ் ஒரு சுருக்க அறிமுகமாக இங்கு தரப்படுகின்றது.
2015-09-20
ஒவ்வொரு இபாதத்துக்குமான வெகுமதிகளை அல்லாஹுதஆலா தந்திருக்கின்றான்.அவ்வெகுமதிகளில் மிகப்பெருமதியான வெகுமதியனை தருவதாக ஒப்புக் கொண்ட இபாதத் ஹஜ்ஜாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை அடைய்ய இல்லற வாழ்வில் தவிர்ந்திருப்பது மட்டுமல்ல தீய காரியங்களிலிருந்து தவிர்ந்திருப்பதும் அவசியம். ஹஜ்ஜில் பொறுமை, அர்ப்பணம், தியாகம் கொண்டு நிறைவு செய்பவருக்கான கூலி சுவனமாகும் என்பதனையும் தெளிவபடுத்துகிறது.
2015-09-13
அல்லாஹ்விடத்தில் அன்பை அருளையும் பெற்றுக்கொள்வதற்கான இபாதத்துக்களில், நாட்களில் மிகச் சிறந்த நாளையும், இபாதத்தையும் கொண்ட மாதமே துல் ஹஜ்ஜாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் சத்தியம் செய்து இந்த மாதத்தை சிறப்பாக்கி இருக்கின்றான். காரணம் இபாதத்துகளில் அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாலாகும்.இந் நாட்களில் மாத்திரம் தான் தொழுகை, நோன்பு,ஸதகா, ஹஜ் என அல்லாஹ் விதித்திருக்கும் கடமைகளில் அனைத்தையும் செய்ய வாய்ப்பிருக்கின்றது. அப்படியாக அறபா, ஹஜ்ஜின் தனித் தன்மைகள் இங்கு விளக்கப்படுகின்றன.
2015-08-10
உலகமெங்களும் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். இவற்றுக்கு முக்கியமான காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையும், முஸ்லிம்களின் பிளவை காபிர்களுக்கு காட்டிக் கொடுக்கும் முஸ்லிம்களும், அவற்றுக்கு இஸ்லாம் காட்டும் தீர்வுகளும்
Go to the Top